வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது…

Author: Udhayakumar Raman
4 August 2021, 3:55 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த காந்திநகரில் வீடு ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் வீடு ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2லட்ச ரூபாய் மதிப்புள்ள 200கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து வீட்டில் வைத்திருந்த இளங்கோ என்பவரை கைது செய்து செங்குன்றம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 118

0

0