அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி மற்றும் ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல்

6 November 2020, 8:28 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் அனுமதியின்றி வாகனங்களில் செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியமுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வருவாய்கொட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் சென்றனர்.

அப்போது செம்மண் ஏற்றி கொண்டு இருந்த லாரி மற்றும் செம்மண் வெட்ட பயன்படுத்தப்பட்டிருந்த ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல் செய்து தாலுக்கா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி மற்றும் ஜே.சி.பி ஓட்டுனர்கள் அஜீத் மற்றும் அருன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 24

0

0