உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 8 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்

3 March 2021, 4:43 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 8 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்ததையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை சிறப்பு தாசில்தார் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது கடலூரில் இருந்து சீர்காழி நோக்கி கார் ஒன்று வருவதைப் பார்த்த அதிகாரிகள் . காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். காரின் உள்ளே உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளியால் ஆன சின்ன சின்ன சிலைகள் அடங்கிய பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Views: - 7

0

0