பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்: உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் அதிரடி

Author: kavin kumar
29 October 2021, 2:29 pm
Quick Share

திருப்பூர்: முருகம்பாளையம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி அருகே மாவு அரைத்து கொடுக்கப்படும் இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் கடை நடத்தி வந்த கார்த்திக் (வயது 35) என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் சுமார் 1500 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கார்த்திக் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவு மில்லையும் பூட்டி சீல் வைத்தனர்.

Views: - 535

0

0