மேத்தபெட்டமின் எனும் போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது…

Author: Udhayakumar Raman
21 September 2021, 6:54 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் மேத்தபெட்டமின் எனும் போதைப் பொருளை பயன்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் பார்வதி நகர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை ஒருவர் பயன்படுத்துவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் கொடுங்கையூர் பார்வதி நகர் பகுதியில் வைத்து ஒரு நபரை கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பதும், இவர் அரும்பாக்கம் லோகநாதன் தெருவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்ற நபரிடமிருந்து மேத்தபெட்டமின் என்னும் போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அதன் பேரில் ஷேக் அப்துல்லாவை கைது செய்த போலீசார்  இருவரிடமிருந்தும் 4 கிராம் மதிப்புள்ள மேத்தபெட்டமின் எனும் போதைப் பொருளை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும்  வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 119

0

0