ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த மூன்று பேர் கைது

21 July 2021, 2:31 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கார், சரக்கு வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்களில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தானை சேர்ந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டபோது,
அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் சரக்கு வாகனம், ஆம்னி கார் ஆகிய மூன்று வாகனங்களில் கடத்தி வந்த சுமார் ஆயிரத்து 500 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதனை பறிமுதல் செய்து ராஜஸ்தானைச் சேர்ந்த உமேஸ், பிரகாஷ், ராகேஸ் வாகனங்களை ஓட்டி வந்த மூன்று பேரை கைது செய்து,

அவர்களிடமிருந்து கார், சரக்கு வாகனம், ஆம்னி கார் உள்ளிட்ட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து வெங்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பான் குட்கா புகையிலை பொருட்கள் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆந்திராவில் இருந்து தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிக்கு பான் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் கடத்தலில் தொடர்புடையவர்கள் முக்கிய நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 56

0

0