சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்: கன்டெய்னர் லாரி உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல்

8 July 2021, 4:31 pm
Quick Share

திருவள்ளூர்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக வாகனங்களில் கடத்தவிருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் மகிமை வாகன நிறுத்த வளாகத்தில் இருந்து
கன்டெய்னர் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா புகையிலை பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக மீஞ்சூர் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது, அங்கு கன்டெய்னர் லாரி உள்ளிட்ட ஆறு சரக்கு வாகனங்களில் சுமார் 16 டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து வாகன ஓட்டுநர்கள் கும்மிடிப்பூண்டி மங்காபுரம் ராஜசேகர், தேவம்பட்டு ராஜி, துரைப்பாக்கம் கர்ணன், அருள்குமரன், தூத்துக்குடியை சேர்ந்தவர் நான்கு பேரையும் கைது செய்ததுடன் தப்பியோடிய வாகன ஓட்டுனர்கள் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்தும், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 134

0

0