புதிதாக நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை: சி.இ.ஓ.ஏ கல்விக் குழும தலைவர் வலியுறுத்தல்..!!

Author: Rajesh
27 April 2022, 7:08 pm
Quick Share

புதிதாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் சி.இ.ஓ.ஏ கல்விக் குழுமத்தின் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை ஆனையூர் பகுதியில் அமைந்துள்ள சி.இ.ஓ.ஏ பள்ளியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கல்விக் குழுமத்தின் தலைவருமான அலசி மை ராசா கிளைமாக்சு அவர்கள் தொடர்ந்து பேசும்போது,

நீட் தேர்வு வருவதற்கு முன் முந்தைய ஆண்டுகளில் தமிழகத்தில் 100 சதவீத மாணவர் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் எவ்வித காத்திருப்பும் இன்றி தன் முதல் முயற்சியிலேயே அரசு மருத்துவக்கல்லூரி நுழைந்து விடுவார். ஆனால் நீட்தேர்வு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

முதல் முயற்சியிலேயே மருத்துவ இடத்தைப் பெறத் துடிக்கும் மாணவர்கள் பின்தள்ளப்பட்டு அவர்களிடம் இடங்களை பறித்துச் சென்றுவிட்டனர். மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதி படையெடுக்கும் மாணவர்கள். நீட் தேர்வு என்பது கட்டாயமாக புகுத்தப்பட்ட அதிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு நீட்தேர்வு இருக்கும் சேர்த்து படித்து கடும் முயற்சி எடுக்கும் முதன்முதலாக போட்டியிடும் புதியவர்கள் நீட் தேர்வில் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பின்பு மருத்துவ கல்லூரி நுழைய முடியாத கொடுமை ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறுகிறது.

அதாவது அரசு மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீடு செய்வதைப் போன்று முதல் முயற்சியில் போட்டியிடும் புதியவர்களுக்கு 70% இடங்களை ஒதுக்கீடு செய்தால் சிக்கலை எளிதில் தீர்த்து விடலாம் மீதமுள்ள 30 சதவீத இடங்களை மறுமலர்ச்சி செய்யும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால் போதுமானது இவ்வாறு புதியவர்களை ஒதுக்கப்படும் 70 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் போல இருக்கலாம்.

அதே போன்று 30% வழங்கப்படும் மறுமுயற்சியாளர்கள் உள் ஒதுக்கீடு வழக்கம் போல செய்து கொள்ளலாம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் நம் தமிழக அரசு முன்வந்தால் நுழைவுத்தேர்வில் பின் தள்ளப்படும் புதிய மாணவர்கள் மிகுந்த பயன் அடைவார்கள் அவர்கள் உறிய மதிப்பையும் தகுந்த நேரத்தில் பெறுவார்கள்.

Views: - 562

0

0