டிவி வெடித்ததில் சிறுவனுக்கு பலத்த தீக்காயம்:தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

Author: kavin kumar
8 November 2021, 3:33 pm
Quick Share

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே ஆலந்தா கிராமத்தில் டிவி வெடித்ததில் சிறுவனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி – ஆறுமுக கனி தம்பதியினரின் மகன் மயில்முருகன்(7) என்பவர் இன்று சுமார் 16:50 அளவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிவி திடீரென வெடித்ததில் மயில்முருகனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது .மேலும் டிவி வெடிக்கும் சத்தம் கேட்டு வெளியே இருந்து வந்த மயில் முருகனின் தாயார் ஆறுமுகணிக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு தனியார் வாகனம் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அனுப்பி வைத்தனர். அங்கு மயில் முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

Views: - 133

0

0