சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

18 September 2020, 7:08 pm
Quick Share

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒரத்தி காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய 16 வயது மகளுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆயலூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் தருமன் (27)என்பவர் சந்திரசேகர் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாக நேற்று பெண்ணின் தந்தை சந்திரசேகர் ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் ஒரத்தி காவல்துறையினர் தருமனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 8

0

0