வீட்டைவிட்டு வெளியேறிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டான்ஸர் கைது

Author: Udhayakumar Raman
19 September 2021, 3:50 pm
Quick Share

அரியலூர்: கீழப்பழூவூரை சேர்ந்த வீட்டைவிட்டு வெளியேறிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனது அம்மாவிற்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்தி உள்ளார். இதனை சிறுமியின் தாயார் கண்டித்ததால் கடந்த 11 ஆம் தேதி விடியற்காலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் பேருந்தில் ஏறி தஞ்சாவூருக்கு பயணசீட்டு வாங்கியவர் கரந்தட்டாங்குடி என்கிற ஊரில் இறங்கி உள்ளார். அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவியை நீண்ட நேரமாக பார்த்து கொண்டிருந்த ராஜசேகர் என்பவர் தான் தஞ்சாவூர் மாவட்டம் கீரைக்கார தெருவில் வசிப்பதாகவும், தான் ஒரு டான்ஸர் என கூறி மாணவி குறித்தும் விசாரித்துள்ளார். மாணவியும் நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற ராஜசேகர் முதல் மூன்று நாட்கள் கழித்து அதன்பிறகு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் மாணவி தன் அம்மாவுடன் செல்வதாக கூறியபோது, நீ அம்மாவிடம் சென்றால் நான் இறந்து விடுவேன் என கூறி மிரட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்து தானாக கிளம்பிய மாணவி கீழப்பழூவூர் போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் நேற்று ராஜசேகரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 144

0

0