ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேரோட்டம்

24 March 2021, 1:54 pm
Quick Share

திருவள்ளூர்: மீஞ்சூர் வடகாஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட காஞ்சி என அழைக்கப்படும் ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாள் முக்கிய விழாவாக பிரம்மோற்சவ திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர். தேரோட்ட விழாவில் பொன்னேரி, பழவேற்காடு, ஆரணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0