புதிய கல்விகொள்கை திட்டம் குறித்து திண்ணை பிரச்சாரம்: பாஜக மாநில மகளிரணி தலைவி மீனாட்சி பேட்டி…

5 September 2020, 9:00 pm
Quick Share

வேலூர்: புதிய கல்விகொள்கை திட்டம் குறித்து மாநிலத்தில் கிராமங்கள் தோறும் அதனை விளக்கி திண்ணை பிரச்சாரம் செய்ய உள்ளதாக பாஜக மாநில மகளிரணி தலைவி மீனாட்சிதெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மகளிரணியின் தலைவி மீனாட்சி தலைமையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் மகளிரணியின் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவி மீனாட்சி கூறியதாவது:- பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள எங்கள் கட்சியின் 60 மாவட்டங்களின் சார்பில் மகளிரணிகள் நூறு நூறு பேராக கொண்ட ஒரு குழுவினர் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். அத்துடன் 90 ஆயிரம் இடங்களில் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை சுவர்களில் வரையவுள்ளோம்.

புதிய கல்வி கொள்கை என்பது மக்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். ஆனால் இதில் தமிழகத்தில் ஊடகங்கள் தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மக்கள் புதிய கல்விகொள்கை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் புதிய கல்விகொள்கை குறித்து மக்களுக்கு விளக்கும் வண்ணம் மாநிலத்தில் மகளிரணியின் சார்பில் எல்லா இடங்களிலும் திண்ணை பிரச்சாரத்தை எடுத்து கூறவுள்ளோம். தொழிற்கல்வியும் வாழ்க்கைக்கு உதவும் என கூறுவோம். பாஜகவில் குற்றப்பின்னனி உள்ளவர்கள் அதிக அளவில் சேர்வது என்பது ஆதாரமற்றது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்டத்தலைவர் தசரதன், மாநில மகளிரணி செயலாளர் கார்த்தியாயினி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Views: - 7

0

0