எஸ்.ஐ வில்சனின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்..! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர்தூவி மரியாதை

Author: kavin kumar
8 January 2022, 5:57 pm
Quick Share

கன்னியாகுமரி: சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ வில்சன் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வில்சன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழக கேரள – எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இரவு நேர கண்காணிப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை திருவிதாங்கோடு மற்றும் நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த சமீம், தவுஃபிக் என்ற இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரது இரண்டாவது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதற்க்காக களியக்காவிளை காவல்நிலையத்தில் அவரது உருவ படம் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

அதற்க்காக களியக்காவிளை காவல்நிலையத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் களியக்காவிளை அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து காவலர்கள் மத்தியில் பேசிய காவல் கண்காணிப்பாளர் இதுவரை நடந்த காவலர் கொலைகள் அனைத்துமே தனியாக சென்றதால் தான் நடந்துள்ளது என்றும் வரும் நாட்களில் காவலர்கள் யாரும் ரோந்து செல்லும் போது தனியாக செல்லக்கூடாது என்றும் இரண்டு அல்லது மூன்று பேர்சேர்ந்துதான் செல்லவேண்டும் என்ற அறிவுரைகளை கூறி சென்றார்.

Views: - 268

0

0