வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு: 4 பவுன் செயின் பறிப்பு

Author: Udhayakumar Raman
23 October 2021, 4:56 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி தலையில் அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சர்வானந்தம்  ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது.  இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இவரின் இரண்டாவது மனைவியான  மாரியம்மாள் தனது மகளுடன் மன்னார்குடி கீழ முதல் தெருவில் வசித்து வந்தார். இவரின் மகளுக்கு திருமணமாகி விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்  மாரியம்மாள்  வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க தயாரான போது மர்ம நபர் ஒருவர் கையில் வீச்சரிவாளுடன் வீட்டுக்குள் நுழைந்து மாரியம்மாளை தலை மற்றும் கழுத்தில் சரமாரி வெட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார். 

மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரியம்மாளை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த மன்னார்குடி காவல்துறையினர் மாரியம்மாளிடம் தங்க நகைக்காக அரிவாளால் வெட்டபட்டதா அல்லது சொத்து மற்றும் முன்விரோதம் காரணமா வெட்டபட்டதா என விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாரியம்மாளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Views: - 175

0

0