வரப்பு பிரச்சினை காரணமாக ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை

17 May 2021, 10:33 pm
Quick Share

தேனி: பெரியகுளத்தில் வரப்பு பிரச்சினை காரணமாக ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு குறித்து காவல்துறையிணர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை போடாங்குளக்கரை பகுதியில் தவசித் தேவர் என்பவர் மகன் செல்வம் என்பவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகே அதே பகுதியைச் சார்ந்த பழனி என்பவரது மகன் முருகன் என்பவருக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது. இருவரும் அருகருகே விவசாயம் செஇது வந்தணர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றும் வரப்பை ஆக்கிரமித்து வருவதாக கூறி செல்வத்திற்கும், முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாரியது. எனவே முருகன் தான் கையில் வைத்திருந்த அருவாளை வைத்து வெட்டியதில் செல்வத்தின் இடது காலில் பலத்த காயம் ஏற்ப்பட்ட்து.

இதில் பலத்த இரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த பெரியகுளம் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடர்கூறு ஆய்விற்க்காக தேனி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரிவாலால் வெட்டி கொலை செய்த முருகன் என்பவர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 73

0

0