நடிகர் விவேக் மறைவுக்கு ஆலமரம் நண்பர்கள் சார்பாக மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி

18 April 2021, 2:43 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் மறைந்த திரைக் கலைஞர் பத்மஸ்ரீ சின்ன கலைவானர் நடிகர் விவேக் மறைவுக்கு ஆலமரம் நண்பர்கள் சார்பாக மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஆலமர நண்பர்கள் சார்பாக நேற்று உயிரிழந்த நடிகரும் பத்மஸ்ரீ டாக்டர் மற்றும் சின்ன கலைவாணர் என அழைக்கக் கூடிய விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாண்டியன் நகர் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து முத்தால் நகர், விவேகானந்தர் தெரு,

காந்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்சிஜன் தரக்கூடிய ஆலமரம் கொன்றை, வேங்கை, புங்கை, வேம்பு உள்ளிட்ட 10 மரக்கன்றுகளை நட்டு ஆலமர நண்பர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு மறைந்த நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுவரை இந்த ஆலமர நண்பர்கள் சார்பாக தொடர்ந்து எட்டு வாரங்களில் வாரம் தோறும் 10 மரங்கள் வீதம் 80 மர கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Views: - 23

0

0