அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு மாடு: குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு கோரிக்கை

28 September 2020, 2:52 pm
Quick Share

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு மாட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பூங்கா ஊழியர்களும் குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்கா பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டிய உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு மாடு, சிறுத்தை, போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை ஒன்று இப்பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததும் வனத்துறை அதை மீட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தாவரவியல் பூங்காவினுள் காட்டுமாடு ஒன்று மேய்ச்சலில் ஈடுபட்டது.

அப்போது அவ்வழியே வந்த பூங்கா ஊழியர்கள் , அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த அச்சமடைந்தனர். எனவே வனத்துறையானது தாவரவியல் பூங்காவில் உலாவரும் ஒற்றை காட்டு மாட்டை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 5

0

0