ஆபாச சாட்… வீடியோ கால்… சிவசங்கர் பாபாவின் லீலைகள் அம்பலம்.. இ-மெயில் கணக்கு அதிரடியாக முடக்கம்..!!

Author: Babu Lakshmanan
30 June 2021, 11:23 am
sivashankar baba - updatenews360
Quick Share

சென்னை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு ஆபாச சாட் செய்தது அம்பலமாகியுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபா தலைமறைவானார்.

இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர்பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 19 ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அவரை 3 நாட்கள் கஸ்டடியில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அவர் நடத்தி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாலியல் விவகாரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு எழுத்துப்பூர்வமாக பதில் பெற்றனர்.

பின்னர், அவர் பயன்படுத்திய லேப்டாப்கள், சிடிக்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச வீடியோ சாட்கள் சிக்கியது. இதையடுத்து, அவருடைய இ-மெயில் கணக்கை அதிரடியாக முடக்கம் செய்தனர்.

Views: - 198

0

0