ஆறு மாதத்திற்கு பின் தேவாலயங்களிலும் இன்று திருப்பலி…

6 September 2020, 2:06 pm
Quick Share

நீலகிரி: உதகையில் ஆறு மாதத்திற்கு பின் அனைத்து தேவாலயங்களிலும் இன்று திருப்பலி நடைபெற்றது.

கடந்த மார்ச் 24 முதல் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் , வணிக வளாகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து கட்டுப்பாடுகளை விதித்தது. படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஏழாம் கட்ட ஊரடங்கில் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்தும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதியை அளித்தது.

இதை அடுத்து கடந்த ஆறு மாதங்களாக வழிபாட்டு தலங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றது. நுழைவு பகுதியில் பக்தர்களுக்கு கிருமிநாசினிகள் கொண்டு கைகளை சுத்தம் செய்தும் முக கவசம் அணிந்து தேவாலயங்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்பு தேவாலயத்தின் போதகர் கூறுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகங்கம் சார்பில் அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் இன்றைய ஆராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் இந்த கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெறும் என கூறினார்.

Views: - 0

0

0