பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுபட்ட சிற்றுண்டி கடைக்காரர் கைது

Author: Udhayakumar Raman
15 September 2021, 5:32 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் பெண் இடுப்பை பிடித்து கிள்ளி பாலியியல் சீண்டலில் ஈடுபட்ட சிற்றுண்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் தனது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பும் போது தனது மகள் இருசக்கர வாகனத்தை ஓட்ட அவர் பின்னால் அமர்ந்து வந்ததாகவும், அப்பொழுது ஆர்.வி நகர் பகுதியில் போதையில் வந்த ஆசாமி ஒருவர் அந்த பெண்ணின் இடுப்பை பிடித்து கில்லி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜவகர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, ஆர்.வி. நகர் பகுதியில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வந்த மோகன் பாபு என்ற நபர் தான் இந்த குற்றத்தை செய்தது என தெரிய வந்தது. அவர் கொடுங்கையூர் கட்டபொம்மன் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 120

0

0