தனிமனித இடைவெளியை பின்பற்றாத ஆவண எழுத்தர் அலுவலகத்திற்கு சீல்

29 September 2020, 9:47 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தனிமனித இடைவெளியை பின்பற்றாத ஆவண எழுத்தர் அலுவலகத்திற்கு மாவட்ட கலால் துணை ஆட்சியர் சரஸ்வதி சீல் வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் நோய்தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் கடந்த 2 நாட்களில் 7 பேர் உயிர் இழுந்துள்ளனர். இதனால் திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் சிவன் அருள் மாவட்ட முழுவதும் அதிகாரிகளுக்கு நோய் தொற்றைத் தடுக்க தீவிர பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக உள்ள ஆவண எழுத்தர் அலுவலகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் நெரிசலாக காணப்பட்டதால் அவ்வழியாக ஆய்வு மேற்கொள்ள வந்த திருப்பத்தூர் மாவட்ட கலால் துணை ஆட்சியர் சரஸ்வதி ஆவண எழுத்தர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அலுவலகத்தில் இருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தி எழுத்தர் அலுவலகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதன் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சிவபிரகாசம் தலைமையிலான வருவாய் துறையினர் அலுவலகத்திற்கு சீல் வைத்துனர்.