சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடைபெற்ற மீன் பிடி திருவிழா….

6 August 2020, 11:21 pm
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமலும் மீன் பிடி திருவிழாவில் கிராம மக்கள் கலந்து கொண்டதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அந்த கிராமத்திற்கு சொந்தமான ஏரியில் குத்தகைக்கு விடப்பட்டு முடியும் கடைசி நாளானது ஊர் மீன் என்று ஊர் மக்கள் ஒன்றிணைந்து மீன் பிடிப்பது வழக்கம் இந்த மீன்பிடி திருவிழாவில் ஊர் மக்கள் பலரும் கலந்து கொள்வார்கள் இன்று அதே போன்று மீன்பிடித் திருவிழா அறிவித்திருந்தனர் அந்த கிராம பெரியவர்கள் இந்த நிலையில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக் கவசங்கள் அணியாமலும் 1000 த்திற்க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி ஏரியில் மீன் பிடித்தனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இருப்பினும் கிராமமக்கள் கெண்டை மீன் கெளுத்தி,கொரவா சிலேபி போன்ற மீன்களை சாக்கு பைகளிலும் கூடைகளிலும் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்.

Views: - 1

0

0