உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் மகன்

Author: kavin kumar
29 September 2021, 4:52 pm
Quick Share

சென்னை: மணலி அருகே உயிரிழந்த தாய்க்கு மகன் கோவில் கட்டி சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியை சேர்ந்தவர் சரவணன். இவரது தாய் சிவகலை.சிவகலைக்கு பத்து மகன், மூன்று மகள் உள்ளனர். இவரது கணவர் ராமதாஸ் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு உயிர் இழந்து உள்ளார் அன்று முதல் தனது மகன், மகள்களை மிகவும் அரவணைப்போடு வளர்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வருடம் இதே நாள் சிவகலையின் பன்னிரண்டாவது மகன் கோட்டிஸ்வரன் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார். இதில் அதிர்ச்சி அடைந்த சிவகலையும் அன்றே உயிர் இழந்தார். இந்த சம்பவம் அக்குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்த தாய்க்கு பதிமூன்றாவதாக பிறந்த மகன் சரவனண் தனது தாய்க்கு கோவில் அமைத்து, அதில் தாயின் சிலையை வைக்க முடிவு செய்தார். அதன்படி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு சிற்பக்கலைங்கரை நாடி அவரது தாயின் புகைப்படத்தை கொடுத்து சிலையை செதுக்க வைத்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக சிலையானது செதுக்கப்பட்டு வீட்டின் முன்பக்கத்தில் கோவில் கட்டி தனது தாயின் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.தற்போது சிலையாக வைக்கப்பட்டுள்ள சிவகலைக்கு பேரன்,பேத்தி ,கொல்லு பேரன்,கொல்லு பேத்தி என 70 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து நினைவு தினத்தில் பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
பெற்ற தாய் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்பும் ஒரு சில மனிதர்கள் மத்தியில் பெற்ற தாய்க்கு இறந்த ஒரு வருடத்திற்குள் கோயில் கட்டி சிலை வைத்து பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேரன்கள்,பேத்திகள் என 60 க்கும் மேற்ப்பட்டோர் ஒன்றிணைந்து 500 பேருக்கு அன்னதானம்,50 பேருக்கு வேட்டி சேலைகள் வழங்கினர்.

Views: - 173

0

0