விறுவிறுப்பாக நடந்த தென்னிந்திய ஐவர் கால்பந்து போட்டி : வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய கோவை காவல் துணை ஆணையாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 9:41 pm
Football 1 - Updatenews360
Quick Share

கோவை புலியகுளம் பகுதியில் புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23வது ஆண்டாக ஐவர் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.

அதேபோல 23 வது ஆண்டாக பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் விறுவிறுப்பாக கால்பந்து போட்டி நடைபெற்றது.

காலை 6:00 மணி முதல் இரவு 11 மணி வரை மின்னொளியில் இந்த போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து வந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தமாக கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற போட்டியில் 64 குழுவினர் 640 வீரர்கள் விளையாடினர். மொத்தம் 97 ஆட்டம் ஆடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட போட்டி நடைபெற்றது. இந்த இறுதிக்கட்ட போட்டியில் ஏ.ஜே.எஸ் அணியும் ரத்தினம் கல்லூரி அணியும் மோதின.

அப்போது இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளியில் சமநிலையில் நின்றது. பின்னர் டைபிரேக்கர் முறையில் ஏ.ஜே எஸ் அணி மூன்று புள்ளிகளும் ரத்தினம் கல்லூரி அணி ஒரு புள்ளியும் பெற்றது. தொடர்ந்து ஏஜே எஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அந்த அணிக்கு பயாஸ் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.

அதேபோல நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக ஏ ஜே எஸ் அணியின் லோகேஷ் அறிவிக்கப்பட்டார். அதே போல சிறந்த கோல் கீப்பராக ட்ரீம் எஃசி அணியின் சதீஸ் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன், எம் கே குரூப் ஆஃப் கம்பெனிஸின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், புனித அந்தோணியார் அருள்தளத்தின் பங்கு தந்தை ராயப்பன், புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை ஜார்ஜ் தனசேகர், புனித அந்தோணியார் அருள் தளத்தின் உதவி பங்கு தந்தை ஜெரால்டின்,டி-1 காவல் ஆய்வாளர் செந்தில், ஆலம் விழுதுகள் நிர்வாக இயக்குனர் மீனா ஜெயக்குமார், ஆரிய வைத்திய சாலையின் பொது மேலாளர் ரவீந்திரன்,ரெவா மோட்டார்ஸ்&பம்ப் நிர்வாக இயக்குனர் இந்திரா, வேதா ஸ்போர்ட்ஸ் கிருஷ்ணகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கினர்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டிகளை கண்டுகளித்தனர். தொடர்ந்து குழுக்கள் முறையில் பார்வையாளர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.

அதேபோல கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்த 108 ஆம்புலன்ஸ்ற்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Views: - 310

0

0