மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Author: Udhayakumar Raman
4 August 2021, 4:56 pm
Quick Share

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணியில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கும், மாதந்திர உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறவும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள்.

மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி வட்டத்தில் அனைத்து கிராமங்களைச்சேர்ந்த இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாதந்திர உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில்

மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவேளி கட்டாயம் பின்பற்றவேண்டும். எனவே பேரவூரணி வட்டத்தைச்சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்

Views: - 106

0

0