கோவையில் கண்கவர் நவராத்திரி கொலு: ஸ்ரீ வள்ளியம்மன் கோவில் வளாகத்தில் அலங்கார கண்காட்சி..!!

Author: Aarthi Sivakumar
9 October 2021, 5:46 pm
Quick Share

கோவை: நவராத்திரி பண்டிகையை ஒட்டி ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 58 வகையான கொலு பொம்மைகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் படைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன.

புரட்டாசி அமாவாசைக்கு பிறகு கொண்டாடப்படும், நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. இந்த நவராத்திரியில் மட்டுமே வீடுகள் மற்றும் ஆலயங்கள் தோறும் கொலு வைத்தும் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளை வழிபட்டு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 58 வகையான கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இதில், சரஸ்வதி, மகாலெட்சுமி, ஐஸ்வர்ய லெட்சுமி, முருகன், விநாயகர், பள்ளிகொண்ட பெருமாள், திருப்பதி பிரம்மோற்சவ செட், பிரதோஷ மூர்த்திகள், அரசியல் தலைவர்கள், ஐயப்பன், குரு வாயூரப்பன், சாய்பாபா, விஷ்ணு, சிவன், பார்வதி உள்ளிட்ட பல்வேறு விதமான பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மனித வாழ்வில், பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் அனைத்து வித நிகழ்வுகளையும் தத்ரூபமாக கூறும் கொலு, இராவண காவியம், கிரிக்கெட் விளையாடும் விநாயகர், மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா, என அனைத்து விதமான கொலு பொம்மைகளும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் படைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன.

நவராத்திரி பண்டிகையை ஒட்டி வரும் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு பல்வேறு விதமான அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. பழமை வாய்ந்த ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கண்டு தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் கொரோனா கால விதிமுறைகள் அமலில் உள்ளதால் அளவான பக்தர்களே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Views: - 160

0

0