புதுச்சேரியில் பாதுகாப்பு ஒத்திகை பார்த்த சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள்
24 February 2021, 5:52 pmபுதுச்சேரி: நாளை புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ள நிலையில் அவர் அரசு விழாவில் பங்கேற்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளில் டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள், புதுச்சேரி போலீசார் உடன் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை பார்த்தனர்
பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கில் நடைபெறும் அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து பிரதமர் சாலை மார்கமாக ஜிப்மர் மருத்துவமனை செல்கிறார், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள், சென்னையில் இருந்து வந்துள்ள அதிவிரைவு அதிரடி படையினர் மற்றும் புதுச்சேரி போலிசார் செய்து வருகின்றனர் இந்நிலையில் பிரதமர் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்கமாக கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது..
0
0