ராணுவ மையத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி

Author: Udhayakumar Raman
31 March 2021, 5:57 pm
Quick Share

நீலகிரி : குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முதன்முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் 141 முன்னால் இராணுவ வீரர்களுக்கு 6 வார காலம் மேம்பட்ட இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த வீரர்களுக்கு முதன்முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு, இராணுவ பயிற்சி மையத்தின் தலைவர் ராஜேஷ்வர்சிங் கமாண்டனட் சத்திய பிரமாணம் செய்து வைத்தார். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு மற்றும் சான்று அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புறையாற்றிய பிரிகேடியர் “இராணுவ வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் கடின பயிற்சியினை” வெகுவாக பாராட்டினர்.

Views: - 83

0

0