காசி விஸ்வநாதர் கோவிலில் எச்.ராஜா சிறப்பு வழிபாடு

Author: Udhayakumar Raman
24 October 2021, 7:42 pm
Quick Share

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே வேப்ப மரத்தடியில் இருந்து வெளிப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்புவழிபாடு செய்தார்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பெரிய மடியூர் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் இருந்து வெளிப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்புவழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இறைவன் ஆங்காங்கே அற்புதங்களை நிகழ்த்தி வருவதாகவும் இந்த ஆலயத்திலும் அற்புதமாக இறைவன் வேப்ப மரத்து அடியில் இருந்து வெளிப்பட்டு உள்ளார் என்றும், மக்கள் உதவியுடன் இறைவன் ஆசியோடு விரைவில் இங்குசிறப்பான ஆலயம் அமையும் எனவும்அவர் தெரிவித்தார்.

Views: - 62

0

0