ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Author: kavin kumar
27 February 2022, 2:27 pm
Quick Share

தருமபுரி : குமாரசாமி பேட்டையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழாவையொட்டி இன்று பூமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

தருமபுரி நகரை அடுத்த குமாரசாமி பேட்டையில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கபட்ட இந்த பெருவிழா தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி இந்தாண்டு வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழா இன்று பூமிதி விழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் அங்கு இருந்த மைதானத்தில் தீக்குண்டம் அமைக்கபட்டு அந்த குண்டத்தில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என பலர் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனையடுத்து பக்தர்கள் அந்த தீகுண்டத்தில் விவசாயம் செழிக்க அப்பகுதி விவசாய பெருமக்கள் உப்பு மற்றம் தானியங்களை கொட்டினர். மேலும் உடல் நிலை சீராக வேண்டியும், கடன் தொல்லை தீரவும், குழந்தை பாக்கியம் வேண்டி தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சக்தி கரகத்துடன் பூசாரி நடந்து சென்றார்.

வருகிற 4 தேதி வரை நடைபெற உள்ள இந்த பெருவிழாவில் பால் குடம் எடுத்தல், அழகு போடுதல், மயாண கொள்ளை உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவையொட்டி விழா குழுவினர் சார்பில் அன்னதானம் நடைபெற உள்ளது. இந்த விழாவை காண தருமபுரி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்தனர்.

Views: - 706

0

0