திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் இலங்கை தமிழர்களின் போராட்டம்: அப்பா என்ற தலைப்பில் 19ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம்

Author: Udhayakumar Raman
28 June 2021, 1:51 pm
Quick Share

திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் அப்பா என்ற தலைப்பில் 19ஆவது நாளாக தொடர்ந்து விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 19-வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் பிரதான கோரிக்கையாக இந்தியாவில் அகதிகளாக உள்ள தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைப்பது ஏன் , தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை காலம் முடிந்தும், தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதான் ஒரு பகுதியாக இன்று அப்பா என்ற தலைப்பினை கொண்டு அவர்களது குடும்பங்கள் படும் துன்பதினை ஓவியமாகவும் வசனங்களாகவும் வரைந்து விரைவில் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 125

0

0