ஸ்ரீரங்கம் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசிக்க பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு

15 September 2020, 6:29 pm
Quick Share

திருச்சி: ஸ்ரீரங்கம் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசிக்க பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ரெங்கநாதரை தரிசிக்க பக்தர்கள்
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் வேண்டும், இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “108 வைணவ திவ்ய தேச தலங்களில் முதன்மையான தலம் என்ற பெருமையை உடைய ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து தரிசனம் செய்ய ஏதுவாக கோவிலுக்குள் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு கோவில் இணைய தளத்தில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்கு வருகிற 19ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அக்டோபர் 3 மற்றும் 10 ஆகிய நாட்களில் காலை 6.30 மணி முதல் 8, வரை 8 மணி முதல் 10 வரை, 10மணி முதல் பகல் 12 வரை, 12 மணி முதல் பிற்பகல் 1, பிற்பகல் 2 மணி முதல் 4.30, மாலை 6 முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வருகிற 26-ந்தேதி மட்டும் மாலை 4.30 மணிக்கு மேல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0