புனித லூர்து அன்னை தேவாலய 101 வது ஆண்டு விழா கொடியேற்றம்
5 February 2021, 9:17 pmமதுரை: மதுரை புனித லூர்து அன்னை தேவாலய 101 வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை தேவாலய 101 ம் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ்விழாவில் புனித லூர்து அன்னை உருவம் பதித்த கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு திறுப்பலி நடத்தி பேராயர் அகிலன் கொடி ஏற்றி வைத்தார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி முக்கிய தெருக்களில் வரும் 13 ம் தேதி நடைபெறும். இதில் இந்த நிகழ்சியில் தமிழகம் முழுவதும் சாதி பேதமின்றி திரளானோர் கலந்து கொண்டு லூர்து அன்னையை வழிபட்டனர். இந்த திருவிழா மதுரையின் முக்கிய விழாவாகும். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
0