திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டீனை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

Author: Udhayakumar Raman
6 August 2021, 6:31 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் அலுவலகத்தை டீன் அலுவலகமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டீனை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக புதிய மருத்துவ கல்லூரி ஒடுக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீனாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 1948 ஆம் ஆண்டு முதல் திண்டுக்கல் அரசு மருத்துவக் மனையில் இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது .இந்த அலுவலகத்தில் இணை இயக்குனராக இருந்த சிவகுமார் கடந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார் .இதையடுத்து இதற்கு பொறுப்பு இணை இயக்குனராக டாக்டர் பூங்கோதை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேசிய மருத்துவ குழுவினர் திண்டுக்கல் இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தினர்.

அப்போது டீன் விஜய் குமார் அலுவலகத்தை முதல்வர் அலுவலகம் பயன்படுத்திக் கொள்வதாகவும் தேசியக்குழு சென்ற உடனே காலி செய்து விடுவதாகவும் கூறினார். தேசிய குழு இன்று சென்று விட்டது .இருந்தும் அவர் இணை இயக்குனர் அலுவலகத்தை காலி செய்யவில்லை. இதனால் இணை இயக்குனர் தங்க முடியாமல் அந்த அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டார். ஊழியர்களையும், இயக்குனர்களையும் காலி செய்யுமாறு டீன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஊழியர்கள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்கள் கூறியதாவது :டீனுக்கு தனி அறை ஏசி வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பணியாற்றுவதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இணை இயக்குனர் அலுவலகத்தை அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள 12 அரசு மருத்துவமனைகளுக்கு இணை இயக்குனர் தான் பொறுப்பாளர். மேலும் மன நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் உட்பட பல ஆய்வு சான்றுகளை இணை இயக்குனர் வழங்க வேண்டியுள்ளது. இணை இயக்குனர் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்தது கண்டிக்கத்தக்கது. மேலும் இயக்குனர் அலுவலகத்தில் இருந்த அத்தனை இணை இயக்குனர் பெயர்பட்டியல் பலகையை தூக்கி எறிந்துவிட்டார். முன்னாள் இணை இயக்குனர் அலுவலக பெயர் பலகையும் பெயர்த்து எறிந்துவிட்டார்.

இதுகுறித்து மருத்துவர் இயக்குனரகத்திற்கு நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம், என்றனர். சென்னையில் உள்ள மருத்துவ இயக்குனரக அதிகாரிகள், நீங்கள் பொறுமையாக இருங்கள்.நாங்கள் முடிவு முடிவு செய்து பதில் சொல்கிறோம் என கூறியதால், ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு சென்றனர். டீனுக்கு எதிராகப் ஊழியர்கள் போராட்டம் நடத்தியது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 108

0

0