ஸ்டாலின் இறைநம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல: சாமிதோப்பில் பால.ஜனாதிபதி பேட்டி

22 November 2020, 8:18 pm
Quick Share

கன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலின் இறைநம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல என்றும், அய்யா வைகுண்டசாமி திராவிட கடவுள் என சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால.ஜனாதிபதி கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 40 ஆண்டுகாலம் திமுக வில் இணைந்து பணியாற்றினேன்.ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகாரணமாக தொடரமுடியாத நிலை இருந்தபோது அம்மா என்னை அழைத்து,பல்வேறு நிலைகளில் உரிய அங்கீகாரம் தரப்படும் என்று எடுத்து கூறினார்.தேர்தல் பிரசாரத்தைகூட சாமிதோப்பில் இருந்து தொடங்கினார்.ஆனால் உடனிருக்கும் கூட்டம்,பலதடைகளை செய்தது.அம்மா மறைவிற்கு பின்னர் அவமானபடுத்தப்பட்டேன்.தகுதியே இல்லாதவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள்.என்மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.இதனால் வேண்டாம் என்று ஓதுங்கிஇருந்தேன்.

என்னுடைய வழிபாடு,அதோடு உள்ள தொடர்புகளோடு இருந்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனால் எங்கிருந்து நான் அனுப்பபட்டேனோ,அங்கிருந்து அழைப்பு வந்தது.தளபதி என்னை அழைத்து பேசினார்.இனிஎன்னோடு கடைசிவரை இருங்கள் என்று கூறினார்.இதை தரவேண்டும், அதை தரவேண்டும் என்று கேட்கவிரும்பவில்லை.உரிய அங்கீகாரம் தந்தால் ஏற்றுகொள்வேன்.எனக்கு பதவிதராததற்கு இடையூறாக இருப்பார்களா என்பது தெரியாது.கட்சி அழைக்கும் அத்தனைநிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டு வருகிறேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவது உறுதி.அதையாரும் தடுக்க முடியாது.அதனைதெரிந்துதான்,திமுகவை மத விரோத கட்சி என்று சித்தரிக்கின்றார்கள்.திமுக விற்கும் கறுப்பர் கூட்டத்திற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக திமுக அறிக்கையும் வெளியிட்டிருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Views: - 0

0

0