ஆதாரத்துடன் நிரூபித்தால் எதையும் சந்திக்க தயார்: ஸ்டாலினுக்கு காமராஜ் பதிலடி

25 September 2020, 4:38 pm
Quick Share

திருவாரூர்: இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் வேளாண் பாதுகாப்பு சட்டம் என்று திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர் அருகே கீலகாவாதுகுடி கிராமத்தில் அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;- நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனையை இயந்திரம் வழங்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆகையால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை பொதுமக்களிடம் ரேஷன் கார்டுகளுக்கு உரியவர்கள் என்று இருந்தால் போதும், அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு விடும் விற்பனை முனையை இயந்திரம் செயல்படவில்லை. மின்சாரம் இல்லை எந்த காரணத்தைக் கொண்டும் பொருள்கள் கொடுக்காமல் இருக்கக்கூடாது. ஆகையால் தடங்கல் இல்லாமல் பொருள்கள் வழங்கப்படும்.

புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதா பொருத்தவரை தமிழகத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டம்தான் ஆகையால் அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் நம்முடைய மாநிலத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் வராது, பிரச்சனை என்று சொன்னால் உடனடியாக தலையிட்டு அதற்கு தீர்வு காணக்கூடிய அரசு அதிமுக அரசு.

உறவை வைத்துக் கொண்டு மிகப்பெரிய ஊழல் முறைகேட்டில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் செயல்பாடு குறித்தும் பிரதமர் பாராட்டியுள்ளார். மு க ஸ்டாலின் ஒரு எதிர்க்கட்சித் தலைவர். அவர் எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்பட கூடாது. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஆதாரத்துடன் அவர் நிரூபித்தார் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். என அமைச்சர் காமராஜ் கூறினார்.

Views: - 7

0

0