அரியலூர் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி வாகனம் தொடங்கி வைப்பு

13 May 2021, 6:28 pm
Quick Share

அரியலூர்: கொரோனா தொற்றால் கட்டுபடுத்தபட்ட பகுதிகளில் அரியலூர் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி வாகனத்தை நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் நகரில் உள்ள மணியங்குட்டை தெரு, செல்லமுத்து நாயக்கர் தெரு, பஞ்சுபட்டறை தெரு, கீரைக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் 16 பேருக்கு கொரோனா தொற்று சுகாதார துறையினரால் உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளை கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அரியலூர் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி வாகனம் இன்று தொடங்கி வைக்கபட்டது.

இதனை நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர் தொடங்கி வைத்தார். இதில் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் 3 காய்கறி வாகனங்கள் ஏற்பாடு செய்யபட உள்ளதாகவும், எனவே கட்டுபடுத்தபட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு கேட்டு கொள்ளபட்டுள்ளது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 43

0

0