காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தேர்தல்

Author: kavin kumar
31 October 2021, 5:59 pm
Quick Share

காஞ்சிபுரம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தேர்தல் ஜனநாயக முறைப்படி காஞ்சிபுரம் சங்க கட்டிடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல். சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது.
மாநில அளவில் சுமார் 6000 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்களுக்குண்டான தேர்தல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையத்தில் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் தாலுகா வளாகத்திலுள்ள சங்க கட்டடத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தியாகராஜன் , காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலையில் 179 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தல் , சங்க தேர்தல் விதிமுறைகள் படியும் ,ஜனநாயக முறைப்படியும், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாக்கு பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏற்கனவே மாநில பொது செயலாளராக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரும் , மாநில பொருளாலராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முத்து செல்வன் என்பவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத் தலைவர் ,மாநில செயலாளர், மாநில துணைத் தலைவர் பதவிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களில் தேர்தல் அலுவலர் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாநில அளவில் நடைபெறும் இந்த சங்க தேர்தலில் மாநில செயலாளராக காஞ்சிபுரத்தை சேர்ந்த தியாகராஜன், திருப்பத்தூர் சர்தார், புதுக்கோட்டையைச் சார்ந்த அரங்க வீரபாண்டியன், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் உள்ளிட்ட 4 வேட்பாளர்களும், மாநிலத் தலைவர் பதவிக்கு செங்கற்பட்டு மாவட்டத்தை சார்ந்த ஜானகிராமன் , நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 வேட்பாளர்களும், மாநில துணை தலைவர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 120

0

0