மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்.! குமரி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார் .!

24 February 2021, 5:49 pm
Quick Share

கன்னியாகுமரி: மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி குமரி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார் .

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் , பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் ,பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார்.அருகில் வருவாய் அலுவலர் ரேவதி ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி ,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயப்பிரகாஷ் ,சமூக நல அலுவலர் சரோஜினி உள்ளனர்.

Views: - 0

0

0