விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு லட்சம் பெறுவதை கைவிட வேண்டும்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

17 June 2021, 4:33 pm
Quick Share

தஞ்சை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு ரூ 40 லட்சம் பெறுவதை கைவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை அரியலூர் ஆகிய 5 மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது கடந்த ஆட்சியில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெற்றது கைவிடவேண்டும், அறிவுறுத்தலை மீறி லஞ்சம் பெற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துறை ரீதியாக அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் கொள்முதல் பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த அரசு நிறைவேற்றும் என்றார்.

Views: - 108

0

0