கோவை மாநகராட்சியில் வரி வசூல் நிறுத்தம்.!

Author: Udhayakumar Raman
6 August 2021, 8:57 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சியில் வரும் 15ஆம் தேதி வரை வரிவசூல் வசூலிக்கப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கோவை மாநகராட்சியில் யூ.டி.ஐ.எஸ் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே, யூ.டி.ஐ.எஸ். மென்பொருள் ஒருங்கிணைக்கும் பணிகள் காரணமாக அனைத்து விதமான வரிவசூல் பணிகள், புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீா் இணைப்பு, வணிக உரிமம் தொடா்பான சேவைகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது. மேலும், சொத்துவரி மற்றும் குடிநீா்க் கட்டணம் செலுத்தும் இணையதள வசதிகள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 99

0

0