கொரோனா தடுப்பு மருந்து மாவட்ட தடுப்பூசி கிடங்கில் சேமித்து வைப்பு

13 January 2021, 6:10 pm
Quick Share

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முன்கள பணியாளர்களுக்கு வழங்குவதற்காக 6900 கொரோனா தடுப்பு மருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு எடுத்துவரப்பட்டு மாவட்ட தடுப்பூசி கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டது,

மத்திய அரசு கோவி சீல்டு மற்றும் கோவாக் சீன் ஆகிய கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது அதன்படி நேற்று பூனாவில் இருந்து தமிழகத்திற்கு 5 லட்சத்து 32 ஆயிரத்து 550 தடுப்பு மருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அதன்பிறகு அங்கிருந்து தமிழகம் முழுவதும் 10 மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டது, அதன்படி திருச்சி மண்டலத்திலிருந்து இன்று காலை புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் அரியலூர் பெரம்பலூர் நாகை திருவாரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு முன்கள பணியாளர்களுக்கு வழங்குவதற்காக தடுப்பு மருந்து கொண்டு செல்லும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6900 தடுப்புமருந்து முன்கள பணியாளர்களுக்கு வழங்குவதற்காக அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து திருச்சியிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு சுகாதாரத்துறை சார்பில் புதுக்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டது. புதுக்கோட்டை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட தடுப்பு மருந்து கிடங்கில் அவை பாதுகாப்பாக இரக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு மருந்து கிடங்கிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் அது தவிர 24 மணி நேரமும் சுகாதார ஆய்வாளர் தலைமையில் சுகாதாரத்துறை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் காவல் துறையோடு இணைந்து செயல்பட உள்ளனர். இந்த தடுப்பு மருந்து முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது இதற்காக மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 11 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. வரும் 16 ஆம் தேதி கிடங்கிலிருந்து அந்தந்த மையங்களுக்கு தடுப்பு மருந்து கொண்டு செல்லப்பட்டு ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள முன் களப் பணியாளர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட உள்ளது.

Views: - 8

0

0