தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

25 August 2020, 9:45 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு இபாஸ் எளிதில் கிடைப்பதால் தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது வரை 1400 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். 8 பேர் இறந்துள்ளனர். 1070 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி அதிகமானோர் பாதிக்கபட்டு உள்ளது பரிசோதனையில் தெரிய வருவதாக கூறினார். குறிப்பாக இபாஸ் எளிதாக கிடைப்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர கூடாது என்ற அவர்,

தடையை மீறி சுற்றி பார்க்க வருபவர்கள் மாவட்ட எல்லையில் திருப்பி அனுப்பபடுவார்கள் எனவும், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் சம்பந்தபட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு சீல் வைக்கபடுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்தார். பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், தேவையின்றி வெளியில் வர கூடாது, கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று எச்சரித்த இன்னசன்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களுக்காக 700 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

Views: - 40

0

0