சுங்கசாவடி பணியாளர்களின் கோரிக்கை தீர்வு காண வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்: பொதுக்குழு கூட்டத்தில் திர்மானம்

11 April 2021, 4:03 pm
Quick Share

திருச்சி: தமிழகத்தில் அனைத்து சுங்கசாவடி பணியாளர்களின் கோரிக்கை தீர்வு காண வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் திர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் கைத்தரி ஜவுளி உற்பத்தியாளர் திருமண மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் காரல் மார்க்ஸ், அற்புதராஜ், ஆரோக்கியதாஸ், பூதகுடி மணி உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரவி பேசிதாவது:- அனைத்து தொழிலாளர்களையும் பணிவரன் முறைப்படுத்தி பணி பாதுகாப்பும், ஊதிய நிர்ணயமும் செய்திடல் வேண்டும், சீரான சம்பளமும், சலுகைகளும் நிர்ணயித்து வழங்கப்பட வேண்டும்.

ESI, PF சட்டங்கள் அமல்படுத்தப்படுவதோடு ESI திட்ட செயல்பாடுத்திட வேண்டும். பணிநிரந்தரம், ஊதிய நிர்ணயம், பணியிட பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மே மாதம் 15ஆம்தேதிக்குள் மத்திய நெடுஞ்சாலைகள் ஆணையம், தொழிளாலர் நலத்துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும். தவறினால் மே-20ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி அனைத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்படுவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Views: - 33

0

0