வேளாண்மை மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அய்யாகண்ணு பேட்டி

By: Udayaraman
2 October 2020, 4:23 pm
Quick Share

திருச்சி: மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக OBC, DNT கணக்கெடுப்பு மற்றும் உடனடி OBC இட ஒதுக்கீடு கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உரிமை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பில் OBC பிரிவை சேர்க்க வேண்டும், OBC உள்ஒதுக்கீடு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும், அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும், 2011ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சங்க மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் சீர்மரபினர் நல சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார்,

அகில இந்திய OBC ஒருங்கிணைப்பு குழு மாநில போராட்டக்குழு தலைவர்( சீர்மரபினர் நல சங்கம்) செல்லபெருமாள் , சங்கத்தின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் காத்தான், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் அய்யாகண்ணு கூறியதாவது;- விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி் வேளாண்மை சட்ட மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில விவசாயி சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து விரைவில் டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

Views: - 39

0

0