தண்ணீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை மூடக்கோரி போராட்டம்: மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்த இழுத்து சென்ற போலீசார்

27 September 2020, 3:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பூத்துறை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ள தனியார் தண்ணீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை மூடக்கோரி அத்துமீறி உள்ளே சென்ற போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தில் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக கூறியும், இந்த நிறுவனத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைவதால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், தண்ணீர் இல்லாமல் அப்பகுத மக்கள் கஷ்டப்படுவதாக கூறியும், எனவே நிறுவனத்தை மூடகோரி அப்பகுதி மக்கள் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வரைந்து வந்த போலிசார் பெண்கள் உள்பட ஊர் மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.