பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவினர் குடும்பத்துடன் போராட்டம்

Author: Udhayakumar Raman
20 September 2021, 3:56 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் தனது குடும்பத்தார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்தவேண்டும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க வேண்டும், ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை ஒன்றிய அரசுக்கு எதிராக தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.சேகர், தகவல் தொழிற்நுட்ப அணியின் இளையசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கருப்பு கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Views: - 190

0

0