மினிபஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி: சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

24 January 2021, 9:28 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே மினிபஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுமித் பிபின் பாலன்(35 ). இவர் வெட்டுனிமடம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை கடைக்குச் சென்று வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மினிபஸ் எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது.

வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சுமித் விஜித் பாலம் மினி பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் உயிர் பிரிந்து இருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து , சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0