ஆசிரியர் பட்டயத் தேர்வு ஆன்லைனில் நடத்தக் கோரி மாணவிகள் போராட்டம்

Author: Udhayakumar Raman
6 September 2021, 6:28 pm
Quick Share

மதுரை: திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாயில் முன்பு , 50க்கும் மேற்பட்ட பயிற்சிப் (ஆசிரியர்)பள்ளியில் பயிலும் மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவிகள் , ஆன்-லைனில் தேர்வு நடத்தக் கோரியும் , தாங்கள் எழுதிவந்த தேர்வில் மதிப்பெண்கள் ஒற்றை இலக்கத்தில் அளித்ததை கண்டித்தும் , தேர்வினை கொரோனா காலம் என்பதால் , காலம் தாழ்த்தி நடத்தக் கோரியும் , பள்ளி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி பேச்சுவார்த்தை நடத்தியும் , சமரசம் ஏற்படாததால் காவல்துறையினர் அவர்களை அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி , 50க்கும் மேற்பட்ட மாணவிகளை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறும் போது , தாங்கள் கூறும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றாவிட்டால் நாள் தோறும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.

Views: - 122

0

0